ADDED : ஜூலை 07, 2026 11:27 PM

சென்னை: 'தமிழகத்தின் கடலோரம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில், இன்று பலத்த காற்று வீசும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில், சில இடங்களில், மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் காற்று வீசும். இடி மின்னலுடன், மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் சில பகுதிகளிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், இடி மின்னலுடன், லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வரும் 11ம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இயல்பான வெப்பநிலையை விட, 2 - 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இன்று மணிக்கு 40 - 60 கி.மீ., வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
