தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ நட்சத்திர ஹோட்டலில் நடிகையை கட்டிப்பிடித்த மாணவர் கைது

 நட்சத்திர ஹோட்டலில் நடிகையை கட்டிப்பிடித்த மாணவர் கைது

 நட்சத்திர ஹோட்டலில் நடிகையை கட்டிப்பிடித்த மாணவர் கைது


ADDED : பிப் 09, 2026 03:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 09, 2026 03:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கி இருந்த, கேரள மாநிலத்தைச் சேர்ந்த, 26 வயது நடிகையை கட்டிப்பிடித்து, தகாத முறையில் நடக்க முயன்ற கல்லுாரி மாணவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை, தி.நகர் தாமஸ் சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில், சினிமா படப்பிடிப்பு தொடர்பாக, கேரள மாநிலத்தைச் சேர்ந்த, 26 வயது நடிகை தங்கி உள்ளார். இரு தினங்களுக்கு முன் மாலையில், அவரின் அறையில், 'இண்டர்காம்' வேலை செய்யவில்லை. இதனால், வரவேற்பு அறைக்கு சென்று, அதுபற்றி தகவல் தெரிவித்து விட்டு, மீண்டும் அறைக்கு திரும்பினார்.

அதன்பின், அவரின் அறைக்கதவை, ஓட்டல் ஊழியர் ஒருவர் தட்டி உள்ளார். கதவை திறந்த போது, அந்த நபர் தொலைபேசியை சரி செய்ய வந்து இருப்பதாக கூறியதால், அவரை தன் அறைக்குள் நுழைய, நடிகை அனுமதி அளித்தார்.

ஆனால், அந்த நபர், தொலைபேசியை சரி செய்வது போல நடித்துள்ளார். அப்போது, நடிகையிடம், 'நீங்கள் நடிகை தானே, உங்களுடன் போட்டோ எடுத்துக் கொள்ளலாமா' என, கேட்டுள்ளார். அதற்கு சம்மதம் தெரிவிக்க நடிகை மறுத்து விட்டார்.

ஆனால், அந்த நபர், நடிகையை விடுவதாக இல்லை. 'செல்பி எடுத்தே தீருவேன்' என, அடம் பிடித்து உள்ளார். அதனால், நடிகை சரி என்றதும், தன் மொபைல் போனில், 'செல்பி' எடுப்பது போல, நடிகைக்கு நெருக்கமாக நின்று, அவரை கட்டிப்பிடித்துள்ளார்.

பின், தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த நடிகை கூச்சலிட்டார். உடன், அந்த நபர், அறையை விட்டு வெளியே சென்றார். இதன் பின், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நடிகை புகார் தெரிவித்தார்.

போலீசார் விரைந்து வந்து, அந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவர் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சையது அப்ரிடி, 20, என்பதும், சென்னையில் உள்ள கல்லுாரி ஒன்றில் படித்து கொண்டே அந்த ஹோட்ட லில், வரவேற்பாளராக பகுதி நேரமாக வேலை பார்த்து வருகிறார் என்பது தெரியவந்தது. கல்லுாரி மாணவர் என்பதால், அவரின் எதிர்காலம் கருதி, 'இனி இதுபோன்ற குற்றச்செயலில் ஈடுபடக்கூடாது' என, போலீசார் எச்சரித்து எழுதி வாங்கினர்.

ஆனால், நடிகை ஏற்க மறுத்து விட்டார். தனக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல் குறித்து, எழுத்துப்பூர்வமாக மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, சையது அப்ரிடியை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us