ADDED : ஆக 06, 2025 12:49 AM

சேரன்மகாதேவி:சக மாணவியுடன் பேசிய, 15 வயது மாற்று சமுதாய மாணவனை தாக்கிய ஐந்து சிறுவர்களை போலீசார் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே கூனியூரை சேர்ந்த, 15 வயது மாணவன், தன்னுடன் படிக்கும் மாணவியுடன் பழகி உள்ளார்.
அந்த மாணவி, வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், 'நீ எப்படி என் சமூக மாணவியுடன் பழகலாம்' எனக்கூறி, ஐந்து சிறார்கள், அந்த மாணவனை அழைத்து தாக்கினர்.
ரத்த காயங்களுடன் மாணவன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
சம்பவம் குறித்து, எஸ்.பி., சிலம்பரசன் உத்தரவில், சேரன்மகாதேவி போலீசார், ஐந்து சிறார்களையும் பிடித்து, சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.
ஒரு மாணவன், சக மாணவியுடன் பழகுவதை காதல் என நினைத்து, சிறுவர்களே அடிதடியில் இறங்கிய சம்பவங்கள், திருநெல்வேலி மாவட்டத்தில் போலீசாருக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

