ADDED : மே 18, 2025 04:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைரோடு: திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடை அடுத்த தர்மாபுரியைச் சேர்ந்தவர் டாக்சி டிரைவர் சூரிய நாராயணன்-.
இவரது இளைய மகன் யோகபாபு 17.
இவர் அம்மையநாயக்கனுார் அரசு மேல்நிலைப்பள்ளி 11ம் வகுப்பில் வணிகவியல் பிரிவில் படித்தார்.
நேற்று முன்தினம் வெளியான பிளஸ் 1 பொது தேர்வு முடிவில் வணிகவியல் பாடத்தில் தோல்வி அடைந்தார்.
இதனால் விரக்தியடைந்த யோகபாபு நேற்று முன் தினம் மாலை கொடைரோடு அருகே சென்னை - மதுரை தேஜஸ் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். கொடைரோடு ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.