மின்சாரம் தாக்கி மாணவர் பலி; தலைமையாசிரியர், ஆசிரியர் சஸ்பெண்ட்
மின்சாரம் தாக்கி மாணவர் பலி; தலைமையாசிரியர், ஆசிரியர் சஸ்பெண்ட்
ADDED : ஜன 25, 2025 02:15 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: மின்சாரம் தாக்கி மாணவர் பலியான விவகாரத்தில், பள்ளியின் தலைமையாசிரியர் கணேசன் மற்றும் வகுப்பாசிரியர் பாண்டி முருகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை பொய்யாவயல் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவர் சக்தி சோமையா, 14, பள்ளியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
விசாரணை நடத்திய முதன்மைக்கல்வி அலுவலர், சம்பம் பற்றி பள்ளியின் தலைமையாசிரியர் கணேசன் மற்றும் வகுப்பாசிரியர் பாண்டி முருகன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

