தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/மரக்கிளை முறிந்து மாணவன் பரிதாப மரணம்

மரக்கிளை முறிந்து மாணவன் பரிதாப மரணம்

மரக்கிளை முறிந்து மாணவன் பரிதாப மரணம்


UPDATED : ஜூன் 28, 2025 06:55 PM

ADDED : ஜூன் 28, 2025 06:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 28, 2025 06:55 PM ADDED : ஜூன் 28, 2025 06:37 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காங்கேயம்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே தனியார் பள்ளியில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் 11ம் வகுப்பு மாணவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே சிவன்மலையில் ஜேசீஸ் மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் காங்கேயம், சவுடாம்பிகை நகரை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் மகன் அக்சயன் (15), 11ம் வகுப்பு கம்யூட்டர் சயின்ஸ் பிரிவில் படித்து வருகிறார்.

இன்று( ஜூன் 28) மாலை 4 மணியளவில் சிறுநீர் கழிக்க கழிவறைக்கு நண்பர்களுடன் சென்றுள்ளார்.அப்போது அங்குள்ள வேப்ப மரக்கிளை ஒன்று முறிந்து மாணவன் மீது விழுந்துள்ளது.இதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து காங்கேயம் டிஎஸ்பி மாயவன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us