உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 07, 2026 05:19 AM
ADDED : அக் 06, 2026 09:36 PM
அ நிறம் | அளவு
துாத்துக்குடி: மின்சாரம் பாய்ந்து ஆறாம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து மகன் மணிகண்டன், 11, அந்த பகுதியில் உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார்.
நண்பர்கள் சிலருடன் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன் மணிகண்டன் நேற்று விளையாடிக் கொண்டிருந்தார்.
சுவரை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த எர்த் கம்பியை அவர் தொட்டபோது மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார்.
அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே மணிகண்டன் உயிரிழந்தார்.
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
