தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ மாணவி பாலியல் பலாத்கார வழக்கு: தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை

மாணவி பாலியல் பலாத்கார வழக்கு: தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை

மாணவி பாலியல் பலாத்கார வழக்கு: தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை


ADDED : அக் 23, 2024 05:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 23, 2024 05:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார் : நர்சிங் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், தொழிலாளிக்கு கடலுார் கோர்ட்டில் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த பாசிகுளத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை,38; கூலி்த்தொழிலாளி. திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர். இவருக்கு கடந்த 2015ம் ஆண்டு நர்சிங் படித்து வந்த 19 வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது.

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை பலாத்காரம் செய்தார். இதனால் மனமுடைந்த மாணவி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.

அவரை குடும்பத்தினர் மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இதுகுறித்த புகாரின் பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து ஏழுமலையை கைது செய்து, கடலுார் மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

வழக்கு விசாரணை நேற்று முடிந்தது. நீதிபதி (பொறுப்பு) லட்சுமி ரமேஷ், இவ்வழக்கில் தொடர்புடைய ஏழுமலைக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். அரசு தரப்பில் வழக்கறிஞர் வளர்மதி ஆஜரானார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us