ADDED : மே 24, 2025 02:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்:17 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியருக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் எஸ்.புதுார் பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து 25. கூம்பூர் பகுதி பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்தார். இவர் அதே பகுதி 17 வயது மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பழகினார். 2023 ல் திருமணம் செய்து கொள்வதாக கூறி வெளியூருக்கு கடத்தி சென்று திருமணம் செய்துகொண்டார். கூம்பூர் போலீசார் காளிமுத்துவை கைது செய்தனர். இதன் வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. காளிமுத்துவுக்கு ஆயுள் தண்டனை , ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி வேல்முருகன் தீர்ப்பளித்தார்.