ADDED : பிப் 23, 2024 02:13 AM

சென்னை: 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ், நாடு முழுதும் 554 ரயில் நிலைய மேம்பாட்டு பணிகளுக்கு, பிரதமர் மோடி, வரும் 26ம் தேதி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக அடிக்கல் நாட்டுகிறார். தெற்கு ரயில்வேயில், 44 ரயில் நிலைய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
மேலும், பணிகள் முடிந்த 193 ரயில்வே மேம்பாலங்கள், சுரங்கப் பாதைகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இதற்கான நிகழ்ச்சிகள், தெற்கு ரயில்வே முழுதும், 231 ரயில் நிலையங்களில் நடக்க உள்ளன.
இந்த பிரமாண்டமான நிகழ்வை குறிக்கும் வகையில், தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள, 232 பள்ளிகளில், '2047ல் வளர்ந்த இந்தியா மற்றும் வளர்ந்த ரயில்வே' என்ற தலைப்பில் கட்டுரை, ஓவியம், பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன. 28,051 மாணவ - மாணவியர் பங்கேற்றனர்; 2,082 பேர் வெற்றி பெற்றனர்.
இவர்கள், வரும் 26ம் தேதி நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.