படிக்கட்டில் பயணம்; நொடிப்பொழுதில் மரணம்; 4 மாணவர்கள் பலி
படிக்கட்டில் பயணம்; நொடிப்பொழுதில் மரணம்; 4 மாணவர்கள் பலி
UPDATED : மார் 12, 2024 12:14 PM
ADDED : மார் 12, 2024 10:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: செங்கல்பட்டு அருகே பஸ்சின் படிக்கட்டில் பயணம் செய்த 4 பேர் ஒரே நேரத்தில் பலியான சம்பவம் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது.
மேல் மருவத்தூர் சிறுநாகலூர் அருகே சாலையோரம் லாரி ஒன்று நிறுத்தப்பட்டது. இந்நேரத்தில் இந்த வழியாக சென்ற தனியார் பஸ்சில் பலரும் படிக்கட்டில தொங்கியபடி சென்றுள்ளனர். இந்நேரத்தில் லாரி மீது பஸ் உரசியதில் மாணவர்கள் மோனிஷ், கமலேஷ், தனுஷ், ரஞ்சித் ஆகிய 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உறவினர்கள் பலரும் சம்பவ இடத்தில் கதறி அழுதனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

