ஸ்டட்ஸ் அக்ஸசரீஸ் முதல் நாளில் 4.38 சதவிகிதம் சரிவு
ஸ்டட்ஸ் அக்ஸசரீஸ் முதல் நாளில் 4.38 சதவிகிதம் சரிவு
ADDED : நவ 08, 2025 04:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மு தலீட்டாளர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய, 'ஸ்டட்ஸ் அக்ஸசரீஸ்' நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் நாளிலேயே 4.38 சதவீதம் சரிந்துள்ளது. சமீபத்தில், ஐ.பி.ஓ., வெளியிட்ட இந்நிறுவனத்தின் பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு விண்ணப்பித்திருந்தனர்.
பங்குகளை விற்க நிறுவனம் வைத்திருந்த இலக்கை விட, 73.25 மடங்கு அதிகமாக விண்ணப்பங்கள் வந்ததாக தரவுகள் வெளியாகின. முதலீட்டாளர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்நிறுவனப் பங்குகள், அதிகபட்ச வெளியீட்டு விலையான 585 ரூபாயிலிருந்து 25.60 ரூபாய் சரிந்து 559.40 ரூபாயில் நிறைவடைந்தது.

