ADDED : ஜன 05, 2026 02:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழகத்தில் பதிவுத்துறையின் தகவல்களை சேகரித்து வைக்கும், 'சர்வர்' வன்பொருளில் நேற்று முன்தினம் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அதை சரி செய்யும் பணியில், பத்திர பதிவுத்துறை ஈடுபட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக, சரி செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்த கோளாறு விரைவில் சரி செய்யப்பட்டு, துறையின் மென்பொருள் முறையாக இயங்க அனைத்து நடவடிக்கைகளும் துரிதமாக எடுக்கப்பட்டு வருகின்றன. எனவே, பொது மக்கள் இதை கருத்தில் கொண்டு, பத்திரப்பதிவு தொடர்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, பதிவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

