புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடீர் தீவிபத்து
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடீர் தீவிபத்து
ADDED : ஆக 11, 2025 08:56 AM

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் நோயாளிகள் யாரும் இல்லாத 20 படுக்கை கொண்ட வார்டு எரிந்து நாசமானது.
புதுக்கோட்டை மாவட்டம் கணேஷ் நகர் காவல் சரகத்திற்கு உட்பட்ட புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள எச்டியு (உயர் சார்பு பிரிவு) 20 படுக்கைகள் கொண்டு செயல்பட்டு வந்தது. கடந்த இரண்டு நாட்களாக நோயாளிகள் யாரும் இல்லை. இந்த நிலையில் ஒரு இயந்திரம் மட்டும் ஊழியர்களால் ஆன் செய்யப்பட்ட நிலையிலேயே இருந்துள்ளது.
இதன் காரணமாக இன்று அதிகாலை 4.30 மணிக்கு ஒரு வெண்டிலேட்டர் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால், வார்டு முழுவதும் புகை சூழ்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு காயங்கள் மற்றும் பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை.