உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : அக் 19, 2026 06:24 PM

அ நிறம் | அளவு
சென்னை: பாமக தலைவர் அன்புமணிக்கு, வலது கால் மூட்டில் சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, பாமக தலைமை நிலைய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னை கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில், பா.ம.க., தலைவர் அன்புமணிக்கு, நேற்று வலது கால் மூட்டில் சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவர் நலமுடன் உள்ளார். அடுத்த இரு வாரங்களுக்கு ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
