உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : மே 26, 2026 05:05 AM
அ நிறம் | அளவு
சென்னை: மின் தடை புகார் உள்ளிட்ட காரணங்களால், இரண்டு தலைமை பொறியாளர் உட்பட 11 பொறியாளர்களை, மின் வாரியம் இடமாற்றம் செய்துள்ளது.
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மின் சாதனங்கள் பழுது காரணமாக, கடந்த வாரத்தில் மின் தடை ஏற்பட்டது. இதனால், மக்கள் வீடுகளில் இருக்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகினர்.
இந்நிலையில், மின் தடை புகார், ஒரே இடத்தில் பல மாதங்களாக பணிபுரிவது உள்ளிட்ட காரணங்களால், இரண்டு தலைமைப் பொறியாளர்கள், திருவள்ளூர் மேற்பார்வை பொறியாளர் உட்பட ஐந்து மேற்பார்வை பொறியாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
மேலும், சென்னை பெரம்பூர், மயிலாப்பூர், கரூர், கோவை தெற்கு ஆகிய மின் வினியோகப் பிரிவு செயற்பொறியாளர்கள், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
