ADDED : மார் 22, 2026 06:05 AM
விருதுநகர்: விருதுநகர் மார்க்கெட்டில் சர்க்கரை 50 கிலோவிற்கு ரூ.70 குறைந்து ரூ.2130, மைதா 90 கிலோவிற்கு ரூ.40 குறைந்து ரூ.4600 என விற்கப்படுகிறது.
இங்கு க.எண்ணெய் 15 கிலோ ரூ.3200, ந.எண்ணெய் 15 கிலோ ரூ.6105, பாமாயில் 15 கிலோவிற்கு ரூ.15 குறைந்து ரூ.2225, ரவை 30 கிலோ ரூ.1540, பொரிகடலை 50 கிலோ ரூ.4000, கொண்டைக்கடலை 100 கிலோ ரூ.5700 என விற்கப்படுகிறது.
துவரம் பருப்பு புதுசு லயன் 100 கிலோ ரூ.11,800 முதல் ரூ.12,200, பாசிப்பருப்பு 100 கிலோ ரூ.9100 முதல் ரூ.9300, உருட்டு உளுந்தம் பருப்பு நாடு 100 கிலோ ரூ.10,000 முதல் ரூ.10,200, உளுந்து லயன் 100 கிலோ ரூ.7600 முதல் ரூ.8000, உளுந்து நாடு 100 கிலோ ரூ.7000 முதல் ரூ.7200, தொலிபருப்பு 100 கிலோ ரூ.9000, பட்டாணி பருப்பு 100 கிலோ ரூ.4300 முதல் ரூ.4350 என விற்கப் படுகிறது.
பாசிப்பயறு லயன் மீடியம் 100 கிலோ ரூ.7500, மல்லி நாடு 40 கிலோ ரூ.5000 முதல் ரூ.6500, மல்லி லயன் 40 கிலோ ரூ.4800 முதல் ரூ.4900, முண்டு வத்தல் 100 கிலோ ரூ.24,000 முதல் ரூ.31,000, வத்தல் நாடு 100 கிலோ ரூ.19,000 முதல் ரூ.22,500, கடலை புண்ணாக்கு 100 கிலோ ரூ.5700, எள் புண்ணாக்கு 50 கிலோவிற்கு ரூ.100 உயர்ந்து ரூ.2200 என விற்பனை செய்யப் படுகிறது.
