ADDED : நவ 26, 2024 10:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலத்தில் குழந்தைகளுடன் கர்ப்பிணிப் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம், கருமந்துறை அருகே அக்கறைபட்டியில் 7 மாத கர்ப்பிணி பெண் மாதம்மாள், அவரது இரு பெண் குழந்தைகளான மனோரஞ்சனி, நித்திஸ்வரி ஆகியோருடன், குடும்ப பிரச்னை காரணமாக, இன்று (நவ.,26) அதிகாலை கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.