நடிகர் விஜய்க்கு ஓட்டுகள் விழாது என்கிறார் சுமன்
நடிகர் விஜய்க்கு ஓட்டுகள் விழாது என்கிறார் சுமன்
ADDED : பிப் 05, 2026 03:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தஞ்சாவூர்: பா.ஜ., நட்சத்திர பேச்சாளரும் திரைப்பட நடிகருமான சுமன் அளித்த பேட்டி:
நடிகர் விஜய், அரசியல் கட்சி துவங்கி, கூட்டம் கூட்டுவது, ஓட்டுகளாக மாறாது. நடிகரின் மீது உள்ள ஒரு பிம்பத்தால் தான் கூட்டம் கூடுகிறது. குறிப்பாக, இளைஞர்கள் கூட்டம் கூடத்தான் செய்யும்.
திரையில் வெளியிடப்படும் திரைப்படத்திற்கு மட்டும் தான் சென்சார் சான்று வழங்கப்படுகிறது. ஆனால், ஓ.டி.டி.,களில், வெளியாகும் சினிமாக்களில், ஆபாச காட்சிகள், வன்முறை காட்சிகள் இடம் பெறுகின்றன. இதற்கு, 'சென்சார்' சான்று வழங்கப்படுவதில்லை. அதை முறையாக கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

