ADDED : பிப் 20, 2025 12:57 AM
சென்னை:தமிழகத்தில், அடுத்த மாதம் முதல் கோடை காலம் துவங்குகிறது.
இதனால் தினமும் சராசரியாக, 16,000 மெகா வாட்டாக உள்ள மின் தேவை, 22,000 மெகா வாட்டை தாண்டும் என, மின் வாரியம் மதிப்பீடு செய்து உள்ளது.
இதை பூர்த்தி செய்ய, மார்ச்சில் தினமும் நள்ளிரவு, 12:00 மணி முதல் மறுநாள் மாலை, 6:00 மணி வரை, 18 மணி நேரத்துக்கு, 750 மெகா வாட்; மாலை, 6:00 மணி முதல் நள்ளிரவு, 12:00 மணி வரை, 1,575 மெகா வாட் மின்சாரம் வாங்க, ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
ஏப்ரலில், 18 மணி நேரத்துக்கு, 1,200 மெகா வாட்; மாலை, 6:00 மணி முதல் இரவு, 12:00 வரை, 2,340 மெகா வாட் வாங்கப்பட உள்ளது.
மே மாதம், 18 மணி நேரத்திற்கு, 600 மெகா வாட்; மாலை, 6:00 மணி முதல் இரவு, 12:00 வரை, 1,320 மெகா வாட் வாங்கப்பட உள்ளது.
இந்த காலத்தில், 18 மணி நேரத்திற்கு வாங்கப்படும் மின்சாரத்தை யூனிட், 5.58 ரூபாய் முதல், 5.99 ரூபாய் வரை; மாலை முதல் நள்ளிரவு வரை யூனிட்டிற்கு, 8.90 ரூபாய் விலையில் வாங்க, வாரியம் முடிவு செய்துள்ளது.
இந்த விலைக்கு மின்சாரம் வாங்க, ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டு உள்ளது.

