தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ கோடை விடுமுறை: அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு துவக்கம்

 கோடை விடுமுறை: அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு துவக்கம்

 கோடை விடுமுறை: அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு துவக்கம்


ADDED : மார் 16, 2026 02:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 16, 2026 02:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: கோடை விடுமுறையையொட்டி, அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்ய, பயணியர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தமிழகத்தில், 300 கி.மீ., துாரத்துக்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு, அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், 1,100க்கும் அதிகமான சொகுசு மற்றும், 'ஏசி' பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இந்த விரைவு பஸ்களில் பயணிக்க, 60 நாட்களுக்கு முன்பே, டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால், கோடை விடுமுறையொட்டி, விரைவு பஸ்களில் பயணம் செய்ய விரும்புவோர் ஆர்வமாக, டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: அரசு விரைவு பஸ்களில், தற்போது இரண்டு மாதங்களுக்கு முன்னரே, முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால், கோடை விடுமுறையில் சொந்த ஊர் அல்லது சுற்றுலா இடங்களுக்கு செல்வோர்,

டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். வரும் கோடை விடுமுறையில், சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு, 500 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிட்டுள்ளோம். ஊர்கள், வழித்தடம் விபரம், அடுத்த மாதம் வெளியிடப்படும். பயணியர், www.tnstc.in என்ற இணையதளம் அல்லது டி.என்.எஸ்.டி.சி., செயலி வாயிலாக, முன்பதிவு செய்து கொள்ளலாம்.

குழுவாக தனி பஸ்களில் செல்வோருக்கு வசதியாக, ஒப்பந்த அடிப்படையிலும் பஸ்கள் இயக்கப்படும். தேவை அதிகரிக்கும் போது, கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us