ADDED : ஜன 04, 2024 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்,:சேலம், கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல் (பொறுப்பு), கணினி அறிவியல் துறை பேராசிரியர் சதீஷ், பாரதிதாசன் பல்கலை பேராசிரியர் ராம்கணேஷ் ஆகியோர், 'பூட்டர் பவுண்டேஷன்' பெயரில், அரசு சாரா தனியார் நிறுவனத்தை தொடங்கியதாக புகார் அளிக்கப்பட்டது.
இதனால், அவர்கள் மீது கருப்பூர் போலீசார், ஒன்பது பிரிவுகளில் வழக்கு பதிந்தனர். இதுதொடர்பான விசாரணைக்கு பெரியார் பல்கலை உளவியல் துறை முனைவர் ஜெயக்குமார், 49, பொருளியல் துறைத்தலைவர் ஜெயராமன்.
மேலாண் கல்வி துறை பேராசிரியர் சுப்ரமணியபாரதி, விலங்கியல் துறை முனைவர் நரேஷ்குமார், 39, தொகுப்பூதிய பணியாளர் தண்டீஸ்வரன், 43, ஆகியோர், இன்று ஆஜராகும் படி, சூரமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் நிலவழகன் நேற்று, 'சம்மன்' அனுப்பினார்.