ADDED : ஏப் 30, 2025 07:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: 'டாஸ்மாக் ஊழல் தொடர்பான விசாரணைக்கு, ஆஜராக வேண்டும்' என, மதுபான நிறுவனங்களுக்கு, அமலாக்கத்துறை 'சம்மன்' அனுப்பி உள்ளது.
டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்த ஊழல் தொடர்பாக, அமலாக்கத்துறை அதிகாரிகள், பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். அவற்றை ஆய்வு செய்த போது, 1,000 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்திருப்பது தெரிய வந்தது.
இது தொடர்பாக, சில தினங்களுக்கு முன், டாஸ்மாக் நிறுவனத்திற்கு, மது பானங்கள் வினியோகம் செய்யும், கோவை நரசிம்மநாயக்கன் பாளையத்தில் செயல்படும், சிவா டிஸ்டில்லரீஸ் நிறுவனத்தின் நிர்வாகிகளுக்கு, சம்மன் அனுப்பி விசாரித்தனர்.
இதன் தொடர்ச்சியாக, எம்.ஜி.எம்., மற்றும் கால்ஸ் மதுபான நிறுவனங்களுக்கும், சம்மன் அனுப்பி உள்ளனர்.

