sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

காஷ்மீர் தாக்குதல்: மத்திய அரசு மீது அவதுாறு பரப்பிய சுந்தரவல்லி; யார் அனுமதிக்காக காத்திருக்கிறது போலீஸ்?

/

காஷ்மீர் தாக்குதல்: மத்திய அரசு மீது அவதுாறு பரப்பிய சுந்தரவல்லி; யார் அனுமதிக்காக காத்திருக்கிறது போலீஸ்?

காஷ்மீர் தாக்குதல்: மத்திய அரசு மீது அவதுாறு பரப்பிய சுந்தரவல்லி; யார் அனுமதிக்காக காத்திருக்கிறது போலீஸ்?

காஷ்மீர் தாக்குதல்: மத்திய அரசு மீது அவதுாறு பரப்பிய சுந்தரவல்லி; யார் அனுமதிக்காக காத்திருக்கிறது போலீஸ்?

135


UPDATED : ஏப் 26, 2025 07:17 PM

ADDED : ஏப் 26, 2025 07:10 PM

Google News

UPDATED : ஏப் 26, 2025 07:17 PM ADDED : ஏப் 26, 2025 07:10 PM

135


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: மத்திய அரசு மீது அவதுாறு பரப்பிய சுந்தரவல்லி மீது வழக்கு பதியலாமா என்பது பற்றி சட்ட ஆலோசனை கேட்டு காத்திருக்கின்றனர், கோவை போலீசார்.

காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலின்போது பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளின் பெயர்களைக் கேட்டு, ஹிந்துவா என்பதை உறுதி செய்விட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக, தி.க., மற்றும் கம்யூனிஸ்ட் ஆதரவாளரான சுந்தரவல்லி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு சர்ச்சையை கிளப்பியது. அந்தப் பதிவில் அவர் ,'காஷ்மீரில் சுற்றுலா சென்றவர்களை இஸ்லாமியர்களா என ஆடையை கழற்றி பார்த்துவிட்டு சுட்டுக் கொன்றவர்கள் ராணுவ உடையில் துப்பாக்கியோடு சென்று சுட்டு இஸ்லாமியர்கள் மீது பழி போட்டு இருக்கிறார்கள். இதற்கு முன்பும் ராணுவத்தை வைத்து பா.ஜ., இதை செய்திருக்கிறது' எனக் கூறியிருந்தார்.

இப்படி மத்திய அரசு மீதும், ராணுவம் மீதும் அவதுாறு பரப்பிய சுந்தரவல்லி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டன குரல்கள் எழுந்தன. அவர் மீது தமிழகம் முழுவதும் வெவ்வேறு மாவட்டங்களில் பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்பினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் வழக்கு பதியப்படவில்லை. 'வழக்கு பதியலாமா' என்று சட்ட ஆலோசனை கேட்பதற்காக, அரசு வழக்கறிஞருக்கு புகாரை அனுப்பி உள்ளோம்' என்று போலீசார் கூறுகின்றனர். மத்திய அரசு மீதும், ராணுவம் மீதும் இப்படி அப்பட்டமான அவதுாறு பரப்பியவர் மீது வழக்கு பதிவதற்கு, சட்ட ஆலோசனை கேட்பதை போன்ற முட்டாள்தனம் எதுவுமில்லை. இதுபோன்று, அசாம் மாநிலத்தில் பேசிய ஒரு எம்.எல்.ஏ., மீது அந்த மாநில அரசு தேச துரோக சட்டத்தில் வழக்கு பதிந்து கைது செய்திருக்கிறது.

ஆனால், தமிழகத்திலோ, சட்ட ஆலோசனைக்காகவும், உயர் அதிகாரிகளின் கண் அசைவுக்காகவும் போலீசார் காத்திருக்கும் அவலம் இருக்கிறது.இதற்கிடையே, சுந்தரவல்லி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், தேச துரோக வழக்கு பதிய வேண்டும் என்று இணையத்தில் நெட்டிசன்கள் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us