தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/மதுரையில் வெயில் சதம்

மதுரையில் வெயில் சதம்

மதுரையில் வெயில் சதம்


ADDED : பிப் 24, 2024 02:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 24, 2024 02:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:ஈரோடு, மதுரை, திருச்சி, நாமக்கல், கரூர் பரமத்தி ஆகிய நகரங்களில், நேற்று, 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியஸ்க்கு மேல் வெயில் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை:

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில், ஒருசில இடங்களில் இன்று, லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இப்பகுதிகளில் சில இடங்களில், வெப்ப நிலை, 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில இடங்களில், பகல் நேர அதிகபட்ச வெப்ப நிலை, 35 டிகிரி செல்ஷியசை ஒட்டி காணப்படும்.

நேற்று மாலை நிலவரப்படி, தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில், 103 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 39.4 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. கரூர் பரமத்தியில், 102; மதுரை விமான நிலையத்தில், 101; நாமக்கல், திருச்சியில் தலா, 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியஸ்க்கு மேல் வெப்பம் பதிவானது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us