2ஜி வழக்கு கண்காணிப்பு : சுப்ரீம் கோர்ட் புது உத்தரவு
2ஜி வழக்கு கண்காணிப்பு : சுப்ரீம் கோர்ட் புது உத்தரவு
ADDED : ஜூலை 11, 2011 11:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: ஸ்பெக்ட்ரம் தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது.
அப்போது, அரசு சார்பற்ற அமைப்பின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷன், '' ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்கு விசாரணையை திறமையாக கண்காணிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமிக்க வேண்டும்,'' என்றார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் சிங்வி மற்றும் கங்குலி கூறியதாவது: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணையில் சி.பி.ஐ.,யும், அமலாக்கத் துறையும் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கின்றன. தற்போதைய நிலையில் வழக்கு விசாரணையில் குறுக்கிட்டால், அது குழப்பத்தை உருவாக்கும், என்றனர்.