இ.பி.எஸ்., மீது மேல் நடவடிக்கைக்கு சுப்ரீம் கோர்ட் தடை
இ.பி.எஸ்., மீது மேல் நடவடிக்கைக்கு சுப்ரீம் கோர்ட் தடை
ADDED : ஜன 27, 2025 12:30 PM

புதுடில்லி: தேர்தல் வேட்புமனுவில் தகவலை மறைத்ததாக இ.பி.எஸ்., மீதான வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது.
2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தனது வேட்புமனுவில் பல்வேறு தகவலை மறைத்ததாக தேனியைச் சேர்ந்த மிலானி என்பவர் சேலம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, முகாந்திரம் இருந்தால் வழக்கு தொடரலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து இ.பி.எஸ்., தரப்பு சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்யக்கோரி, இ.பி.எஸ்., தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.
இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், இ.பி.எஸ்., மீதான மேல் நடவடிக்கைக்கு தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், இது தொடர்பாக எதிர்தரப்புக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, 4 வாரங்களில் பதிலளிக்க ஆணையும் பிறப்பிக்கப்பட்டது.

