கரூர் கூட்ட நெரிசல் வழக்கு சுப்ரீம் கோர்ட் நாளை உத்தரவு
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு சுப்ரீம் கோர்ட் நாளை உத்தரவு
ADDED : அக் 11, 2025 11:35 PM
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்கிறது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கரூரில் மேற்கொண்ட தேர்தல் பிரசாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தை விசாரித்த சென்னை உயர் நீதி மன்றம், சிறப்பு விசாரணை குழுவை அமைக்க உத்தரவிட்டது.
இதை எதிர்த்து த.வெ.க., சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதேபோல, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினர் சிலரும் சி.பி.ஐ., விசாரணைக்கோரி மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த 10ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நடந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்க உள்ளது.
முன்னதாக சென்னை உயர் நீதிமன்றம், த.வெ.க., தலைவர் விஜய்க்கு எதிராக தனிப்பட்ட முறையில் சில கருத்துகளை தெரிவித்து இருந்தது. இதற்கு அக்கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடும் எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டது.
- டில்லி சிறப்பு நிருபர் -