sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 இடைத்தரகர்களுக்கு இனிப்பு; விவசாயிகளுக்கு கசப்பு பொங்கல் கரும்பு கொள்முதல் ஊழல் குறித்து அன்புமணி

/

 இடைத்தரகர்களுக்கு இனிப்பு; விவசாயிகளுக்கு கசப்பு பொங்கல் கரும்பு கொள்முதல் ஊழல் குறித்து அன்புமணி

 இடைத்தரகர்களுக்கு இனிப்பு; விவசாயிகளுக்கு கசப்பு பொங்கல் கரும்பு கொள்முதல் ஊழல் குறித்து அன்புமணி

 இடைத்தரகர்களுக்கு இனிப்பு; விவசாயிகளுக்கு கசப்பு பொங்கல் கரும்பு கொள்முதல் ஊழல் குறித்து அன்புமணி


ADDED : ஜன 01, 2026 02:07 AM

Google News

ADDED : ஜன 01, 2026 02:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'பொங்கல் தொகுப்புக்கான கரும்பை, விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்; குடும்பத்திற்கு இரண்டு கரும்புகள் வழ ங்க வேண்டும்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

அவரது அறிளக்கை:

பொங்கலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு குறித்தோ, அதில் கரும்பு இடம் பெறுவது குறித்தோ, தமிழக அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இதனால், பொங்கல் தொகுப்புக்கு கொள்முதல் செய்யப்படும் என நம்பி, பன்னீர் கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

அரசை நம்பி, பொங்கல் கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, ஆட்சியாளர்களால் இழைக்கப்படும் துரோகத்தால், தை பிறந்தால் வலி தான் பிறக்கிறது.

தமிழக மக்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்புக்காக, பன்னீர் கரும்பை கொள்முதல் செய்யும்போது, குளறுபடி நடப்பதால், ஆண்டுக்கு ஆண்டு வலி பிறக்கிறது.

ரூ.1 லட்சம் லாபம்

பொங்கல் கரும்புக்காக, அரசால் நிர்ணயிக்கப்படும் விலை, விவசாயிகளுக்கு முழுமையாக கிடைக்காததும், விவசாயிகள் விளைவிக்கும் பன்னீர் கரும்புகள் நடைமுறைக்கு, சாத்தியமற்ற நிபந்தனைகளை காரணம் காட்டி நிராகரிக்கப்படுவதும், இந்த பிரச்னைகளுக்கு காரணமாகும்.

பன்னீர் கரும்பு சாகுபடிக்கு, ஏக்கருக்கு 2.25 லட்சம் ரூபாய் செலவாகும். கடந்த ஆண்டு, கரும்புக்கு 35 ரூபாய் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது.

ஆனால், அரசு நேரடியாக கொள்முதல் செய்யாமல், இடைத்தரகர்கள் வழியே வாங்கியது. இதனால், கரும்புக்கு 18 அல்லது 19 ரூபாய் மட்டும் விவசாயிகளுக்கு கிடைத்தது; மீதித் தொகையை இடைத்தரகர்கள் எடுத்துக் கொண்டனர்.

மேலும், 20,000 கரும்புகள் கொள்முதல் செய்தால், 2,000 கரும்புகளை இலவசமாக எடுத்துக் கொள்கின்றனர். இதனால், விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 1 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கிறது.

குற்றம்

இடைத்தரகர்களுக்கு 2.25 கோடி கரும்புகள் கொள்முதல் செய்தால், 45 கோடி ரூபாய் கிடைக்கிறது. இதை, இடைத்தரகர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கிட்டு கொள்கின்றனர் என, விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

பொங்கல் கரும்பு கொள்முதல் என்பது, அதி கார வர்க்கத்திற்கும், இடைத் தரகர்களுக்கும் இனிப்பானதாகவும், விவசாயிகளுக்கு கசப்பானதாகவும் மாறி விட்டது. இதற்கு, தி.மு.க., ஆட்சியில் எங்கும் நிறைந்திருக்கும் ஊழல் தான் காரணம்.

இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண, நடப்பாண்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்படும் கரும்புகள் எண்ணிக்கையை இரண்டாக உயர்த்த வேண்டும். கரும்பு கொள்முதல் விலையை 50 ரூபாயாக உயர்த்த வேண்டும். அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us