ADDED : ஜூலை 27, 2025 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டாமுத்துார்:கோவைபழனிச்சாமி என்பவரின் நிலத்திற்கு, நில சொத்து மதிப்பு சான்றிதழ் கேட்டு, உதவியாளர் ரஞ்சித்குமார், பேரூர் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். சான்றிதழ் வழங்க, தாசில்தார் ரமேஷ்குமார், 50,000 ரூபாய் கேட்டுள்ளார்.
லஞ்சம் வாங்கிய போது, தாசில்தார் ரமேஷ்குமார், உதவியாளர் சரவணனை ரஞ்சித்குமார் புகாரில், லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
இருவரையும், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், நேற்று மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தினர். இருவரையும், 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதன்படி, அவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.