ADDED : பிப் 13, 2025 02:12 AM
சிவகங்கை:சாக்கூரில் இரட்டை டம்ளர் முறை அமலில் இருப்பதாக வந்த புகார் குறித்து தாசில்தார் தலைமையில் விசாரணை நடந்தது.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், சாக்கூரில் பல்வேறு தரப்பினர் வசிக்கின்றனர். இங்கு பட்டியலினத்தவரை அம்மன் கோவிலுக்குள் நுழைய தடுப்பதாகவும், டீக்கடைகளில் இரட்டை டம்ளர் முறை இருப்பதாகவும் கூறி, பிப்., 14ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, சில அமைப்பினர் அறிவித்தனர். இதையடுத்து, சமரச கூட்டத்திற்கு தாசில்தார் முபாரக் உசேன் அழைப்பு விடுத்தார்.
கூட்டத்தில் தாசில்தார், இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி, மண்டல துணை தாசில்தார் சுந்தரமூர்த்தி, சாக்கூர் கிராமத்தினர், புகார் தெரிவித்த அமைப்பின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தாசில்தார் கூறுகையில், ''பட்டியலினத்தவர் கோவிலில் நுழைய தடை, இரட்டை டம்ளர் முறை புகார் கூறியவர்கள் அதற்கான எந்த ஆதாரத்தையும் தாக்கல் செய்யவில்லை. எனவே, புகார் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.

