'செல்பி' எடுத்து பதிவேற்றுங்க இலவச பிரியாணியை வெல்லுங்க
'செல்பி' எடுத்து பதிவேற்றுங்க இலவச பிரியாணியை வெல்லுங்க
ADDED : டிச 20, 2024 12:38 AM
சென்னை:திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி நிறுவனத்தின் புதிய, 'லெஜெண்டரி எக்ஸ்பிரஸ் பக்கெட் ஆப் பிரியாணி செலிப்ரேஷன்' வாகனத்தை, அதன் நிர்வாக தலைவர் நாகசாமி தனபாலன், தலைமை தொழில் அதிகாரி செந்தில்குமார் ஆகியோர், பெங்களூரில் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.
இதுகுறித்து, திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி நிர்வாக தலைவர் நாகசாமி தனபாலன் கூறியதாவது:
எங்களின் புதிய அறிமுகமான, 'லெஜெண்டரி எக்ஸ்பிரஸ் பக்கெட் ஆப் பிரியாணி செலிப்ரேஷன்' வாகனம், பெங்களூரில் இருந்து ஓசூர், சேலம், ஈரோடு, கோவை, திருச்சி, மதுரை, விழுப்புரம், புதுச்சேரி வழியாக சென்னை வந்தடையும். ஆறு நாட்களில் 1,500 கி.மீ., வாகனம் பயணிக்கும். வாடிக்கையாளர்கள் இந்த வாகனத்தை, 'செல்பி' எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து,' 50 லைக்' பெறுவோருக்கு, திண்டுக்கல் தலப்பா கட்டி பிரியாணி இலவசமாக வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தலைமை தொழில் அதிகாரி செந்தில்குமார் கூறுகையில், ''திண்டுக்கல் தலப்பாகட்டி, 'லெஜெண்ட் எக்ஸ்பிரஸ் பக்கெட் ஆப் செலிப்ரேஷன் பேமிலி பேக்'கில், நான்கு முதல் ஐந்து பேர் வரை சாப்பிடலாம். 'பார்ட்டி பேக்கில்' ஒன்பது முதல் 10 பேர் வரை சாப்பிடலாம். அத்துடன் சிக்கன் லாலிபாப், மட்டன் கோலா உருண்டை, பிரட் அல்வா, லெமன் சோடா, கோபி 65, வெஜ் கோலா உருண்டை போன்றவற்றை வழங்குகிறோம். இது, தமிழகத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும் கிடைக்கும்,'' என்றார்.