sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'உங்க மாநிலத்திற்கே எடுத்து செல்லுங்கள்' மருத்துவ கழிவுகள் விவகாரத்தில் கேரளாவுக்கு தீர்ப்பாயம் சூடு

/

'உங்க மாநிலத்திற்கே எடுத்து செல்லுங்கள்' மருத்துவ கழிவுகள் விவகாரத்தில் கேரளாவுக்கு தீர்ப்பாயம் சூடு

'உங்க மாநிலத்திற்கே எடுத்து செல்லுங்கள்' மருத்துவ கழிவுகள் விவகாரத்தில் கேரளாவுக்கு தீர்ப்பாயம் சூடு

'உங்க மாநிலத்திற்கே எடுத்து செல்லுங்கள்' மருத்துவ கழிவுகள் விவகாரத்தில் கேரளாவுக்கு தீர்ப்பாயம் சூடு


ADDED : டிச 20, 2024 12:30 AM

Google News

ADDED : டிச 20, 2024 12:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'திருநெல்வேலியில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை மூன்று நாட்களுக்குள் கேரளா கொண்டு செல்ல வேண்டும் அல்லது கழிவு மேலாண்மை நிறுவனம் வாயிலாக அகற்ற வேண்டும்' என, கேரள அரசுக்கு தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மண்டல புற்று நோய் மையம் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருந்து ஆபத்தான மருத்துவக் கழிவுகள், நெல்லை மாவட்டம், கொடகநல்லுார், பழவூர் கிராமங்களில் பட்டா நிலங்கள் மற்றும் நீர்நிலைகளில் கொட்டப்பட்டு உள்ளன.

கடந்த சில மாதங்களாக இதுபோல கொட்டப்படுவதாகவும், சில நாட்களில் அவற்றை எரித்து விடுவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, அரசிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என, நில உரிமையாளர்கள் குற்றஞ்சாட்டியதாக, டிசம்பர் 17ம் தேதி நாளிதழ்களில் செய்தி வெளியானது.

அதன் அடிப்படையில், தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு பதிந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான தமிழக அரசு வழக்கறிஞர் சண்முகநாதன், ''கேரளாவில் இருந்து நாங்குநேரி சாலையோரங்களில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டபோது, அவற்றை அகற்ற தமிழக அரசு 69,000 ரூபாய் செலவிட்டது.

''அதை தமிழக அரசுக்கு வழங்குமாறு தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை, கேரள மாசு கட்டுப்பாட்டு வாரியம் செயல்படுத்தவில்லை. நெல்லை மாவட்ட கிராமங்களில் கொட்டப்படும் கழிவுகள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளன,'' என்றார்.

தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய வழக்கறிஞர் சாய் சத்யஜித், ''மருத்துவக் கழிவுகளை கொட்டிய திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இரண்டு மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கேரள மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

''கேரள எல்லைகளில் கண்காணிப்பை உறுதிப்படுத்த முடிவு செய்துள்ளோம். அந்த இரண்டு மருத்துவமனைகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.

கேரள மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரேமாஸ்மிருதி, ''நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள், கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்டவை தான்.

''இதற்கும், கேரள அரசுக்கும் தொடர்பில்லை, கேரள அரசுடன் சம்பந்தப்படாத, அங்கீகரிக்கப்படாத கழிவு சேகரிப்பாளர்களால், இந்த கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. கழிவுகளை கொட்டிய இரண்டு மருத்துவமனைகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது,'' என்றார்.

அதைத் தொடர்ந்து வாதிட்ட தமிழக அரசு வழக்கறிஞர் சண்முகநாதன், ''பலமுறை நடவடிக்கை எடுத்தும், தமிழக பகுதிகளில் கேரள கழிவுகள் கொட்டப்படுவது தொடர்கிறது. இதை தடுக்க, தீர்ப்பாயம் உறுதியான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்,'' என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின், தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:

நெல்லை மாவட்ட கிராமங்களில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை, மூன்று நாட்களுக்குள், அங்கீகரிக்கப்பட்ட கழிவு மேலாண்மை நிறுவனங்கள் வாயிலாக, கேரள மாசு கட்டுப்பாட்டு வாரியம் அகற்ற வேண்டும். இல்லையெனில், கழிவுகளை கேரளா கொண்டு செல்ல வேண்டும்.

இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, வழக்கின் அடுத்த விசாரணை நடக்கும் 23ம் தேதிக்குள், கேரள மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

கேரளாவில் இருந்து வாகனங்களில் மருத்துவ கழிவு எடுத்து வரப்பட்டு, கோவையில் சாலையோரங்களில் கொட்டப்படும் இடங்கள்:

கோவை மாவட்ட எல்லையில், மதுக்கரை நகராட்சிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர்., நகர் கல்லுக்குழி, நவக்கரை, மாவுத்தம்பதி, அப்பாச்சிகவுண்டன்பதி சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் வாளையாறு எல்லையில் தோட்டங்கள்

போத்தனுார் அருகே ஈச்சனாரி - செட்டிபாளையம் சாலையில் இடைப்பட்ட பகுதிகள், எல் அண்டு டி பைபாஸில் மதுக்கரையில் துவங்கி ஆனைமலையம்மன் கோவிலுக்கு செல்லும் பகுதியில் உள்ள ரோட்டோரங்களில் இருபுறமும் ஆங்காங்கே

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் மீனாட்சிபுரம், கோவிந்தாபுரம், கோபாலபுரம், நடுபுனி, கிணத்துக்கடவு அருகே வீரப்பகவுன்டனுார் வழியாகவும், செமணாம்பதி வழியாகவும் கேரளாவில் இருந்து இறைச்சி மீன் கழிவுகள் எடுத்து வரப்படுகின்றன. வாகனங்களில் மூட்டை மூட்டையாக கழிவுகள் எடுத்து வரப்பட்டு, ரோட்டோரங்களில் துாக்கி வீசிச் செல்கின்றனர். இப்பகுதிக்கு சமீபகாலமாக மருத்துவ கழிவுகள் வருவதில்லை

நீலகிரி மாவட்டத்தில் பந்தலுார் மற்றும் கூடலுார் ஆகிய பகுதிகள், கேரள மாநிலத்தின் எல்லையில் உள்ளன. அம்மாநிலத்தில் இருந்து மருத்துவ கழிவுகள், நான்கு ஆண்டுகளுக்கு முன் கொண்டு வரப்பட்டு கொட்டப்பட்டன. நீலகிரி மாவட்ட நிர்வாகத்தினர், கேரளா சென்று அறிவுறுத்தியதை தொடர்ந்து, சமீபகாலமாக கொட்டுவதில்லை.






      Dinamalar
      Follow us