ADDED : ஏப் 03, 2025 01:28 AM

வேளாண் உற்பத்தியை அதிகரிக்க, மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட, 'தன் தன்யா கிருஷி' திட்டம், விவசாயிகள் கடன் அட்டை திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் தமிழகம் பயன் பெற, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில், எவ்வளவு நீர்நிலைகள், கால்வாய்கள் துார்வாரப்பட்டன என்பது குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும். கரும்புக்கு நுண்ணுாட்டம், உயிர் உரங்கள் ஆகியவற்றை, 50 சதவீத மானிய விலையில் வழங்க வேண்டும்.
இயற்கை முறையில் விளையும் காய்கறிகள், பழங்களை விற்பனை செய்ய, மாநகர எல்லைக்குள், இயற்கை விளைபொருள் சந்தை அமைக்க வேண்டும்; ரேஷன் கடைகளில், சிறு தானியங்களை மானிய விலையில் வழங்க வேண்டும்.
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியில் மஞ்சளில் இருந்து, 'குர்க்குமின்' என்ற வேதிப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும். தென்னை மரங்களை தாக்கும் வெள்ளை ஈ தாக்குதல் நோயை கட்டுப்படுத்த வேண்டும். தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும், ஐந்தாம் வகுப்பு வரை நம் தாய் மொழியான தமிழை பயிற்று மொழியாக்க வேண்டும். ஈரோட்டில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சரஸ்வதி
பா.ஜ., -- எம்.எல்.ஏ.,

