7 லட்சம் டன் குண்டு அரிசிக்கு பதிலாக சன்னரக அரிசி கேட்கி।றது தமிழகம்
7 லட்சம் டன் குண்டு அரிசிக்கு பதிலாக சன்னரக அரிசி கேட்கி।றது தமிழகம்
ADDED : நவ 02, 2025 12:54 AM
சென்னை: தமிழகத்தில் உள்ள 7 லட்சம் டன் குண்டு அரிசியை கேரளாவிடம் வழங்குமாறும், அதற்கு பதிலாக சன்னரக அரிசியை தருமாறும், மத்திய அரசை தமிழக உணவு துறை வலியுறுத்தி உள்ளது.
மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், தமிழக விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யும் பணியை, தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம் மேற்கொள்கிறது.
இந்த நெல், அரவை ஆலைகளில் அரிசியாக மாற்றப்பட்டு, ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை அரிசியாக மாற்றியதில், 7 லட்சம் டன் குண்டு அரிசி, நுகர்பொருள் வாணிப கழகத்திடம் உள்ளது.
கேரள மாநில மக்கள் தான், குண்டு அரிசியை விரும்பி சாப்பிடுகின்றனர். தமிழக மக்கள் சன்னரக அரிசியை தான் அதிகளவில் சாப்பிடுகின்றனர்.
எனவே, 7 லட்சம் டன் குண்டு அரிசியை பெற்று, அதை கேரளாவிடம் வழங்கி, அதற்கு பதில் 7 லட்சம் டன் சன்னரக அரிசியை தமிழகத்திற்கு வழங்குமாறு, மத்திய அரசை உணவு துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

