பரபரப்பான அரசியல் சூழலில் கூடியது தமிழக சட்டசபை; மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம்
பரபரப்பான அரசியல் சூழலில் கூடியது தமிழக சட்டசபை; மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம்
ADDED : டிச 09, 2024 09:45 AM

சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், இன்று (டிச.,09) காலை 9.30 மணிக்கு சட்டசபை கூடியது. மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக சட்டசபை இன்று (டிச.,09) காலை 9.30 மணிக்கு கூடியது. சட்டசபை துவங்கியதும், இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, ராணுவ முன்னாள் தலைமை தளபதி பத்மநாபன், ரத்தன் டாடா, சீதாராம் யெச்சூரி உட்பட பலரின் மறைவுக்கு சபாநாயகர் அப்பாவு இரங்கல் தீர்மானம் வாசித்தார்.
பின்னர் மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புயல் மழையால் ஏற்பட்ட பாதிப்பு, சாத்தனுார் அணை திறப்பு சர்ச்சை, சென்னையில் குடிநீரில் கழிவு நீர் கலந்ததால் இருவர் உயிர் இழந்தது, சட்டம் ஒழுங்கு, உள்ளாட்சிகள் இணைப்பு, உள்ளாட்சி தேர்தல் உட்பட பல்வேறு பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பும் என்பதால், விவாதத்தில் அனல் பறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.