டிசம்பர் 9ல் கூடுகிறது தமிழக சட்டசபை; விரைவில் முழுமையாக கூட்டத்தொடர் நேரலை; சபாநாயகர் அப்பாவு
டிசம்பர் 9ல் கூடுகிறது தமிழக சட்டசபை; விரைவில் முழுமையாக கூட்டத்தொடர் நேரலை; சபாநாயகர் அப்பாவு
UPDATED : நவ 25, 2024 01:03 PM
ADDED : நவ 25, 2024 01:02 PM

சென்னை: தமிழக சட்டசபை டிச., 9ம் தேதி கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். அவர், 'அவை நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்ய படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், சபாநாயகர் அப்பாவு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக சட்டசபை கூட்டத்தொடர் டிச.,9ம் தேதி காலை 9.30 மணிக்கு துவங்குகிறது. கூட்டத்தொடர் எவ்வளவு நாட்கள் நடக்கும் என்பதை அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு எடுக்கும்.
சட்டசபை கூட்டத்தொடரை முழுமையாக நேரலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கல்லூரி, பள்ளிகளில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து மாணாக்கர் படிக்க அரசு நடவடிக்கை எடுக்கிறது. மானியக் கோரிக்கைகளுக்காக கடைசியாக ஜூன் 20ம் தேதி முதல் 29ம் தேதி வரை சட்டசபை கூட்டம் நடந்தது. இவ்வாறு அவர் கூறினார்.