sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அவதுாறு பரப்புவதை தவிர்க்க வேண்டும்: தமிழக பா.ஜ., வேண்டுகோள்

/

அவதுாறு பரப்புவதை தவிர்க்க வேண்டும்: தமிழக பா.ஜ., வேண்டுகோள்

அவதுாறு பரப்புவதை தவிர்க்க வேண்டும்: தமிழக பா.ஜ., வேண்டுகோள்

அவதுாறு பரப்புவதை தவிர்க்க வேண்டும்: தமிழக பா.ஜ., வேண்டுகோள்


ADDED : ஜூன் 10, 2025 10:29 PM

Google News

ADDED : ஜூன் 10, 2025 10:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழக பா.ஜ., மீது அவதூறு பரப்புவதை எதிர்க்கட்சிகள் தவிர்க்க வேண்டும் என்று மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

நயினார் நாகேந்திரன் அறிக்கை:

மலேசியா, சிங்கப்பூர் உட்பட உலகெங்கும் உள்ள பல கோடி மக்கள் முருகப்பெருமானை வழிபட்டு, கொண்டாடி வரும் வேளையில், தமிழகத்தில் முருக பக்தர்களைத் திரட்டி முருகனுக்கென விழா எடுக்க நமது தமிழக பாஜகவும் இந்து முன்னணியும் இணைந்து முன்னெடுத்து இருக்கின்றன. இந்நிலையில், 'தமிழ்நாட்டுக்கு வெளியே பா.ஜ., முருகப் பெருமானுக்கு யாத்திரை எடுத்திருக்கிறதா?' என்று சிலர் கேட்பது ஆச்சரியமாக இருக்கிறது.

குறிப்பிட்ட மதக்கடவுள்களை மட்டும் இழிவுபடுத்தும் சில கட்சிகளுக்கு மத்தியில், மாநில வித்தியாசமின்றி அனைத்து பகுதியிலும் அனைத்து கடவுள்களையும் போற்றி வருவது தான்

பா.ஜ.,வின் வழக்கம். அதனை நிருபிக்கும் விதமாக, வைகாசி விசாகத்தை முன்னிட்டு, மகாராஷ்டிராவில், அதுவும் மும்பை மாநகரில் நமது பா.ஜ., சொந்தங்கள் சியோன் கோலிவாடா சட்டமன்ற உறுப்பினர் கேப்டன் தமிழ்செல்வன் தலைமையில், பெருந்திரளான பக்தர்களுடன் மிகச்சிறப்பாக வேல்யாத்திரை நடத்தி இருக்கிறார்கள்.

'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பது நாம் அனைவரும் அறிந்த பழமொழி. எனவே, தமிழக பா.ஜ., மீது தேவையற்ற அவதூறுகளை பரப்புவதை எதிர்க்கட்சிகள் தவிர்க்க வேண்டும்! மேலும் திருப்பரங்குன்றத்தில் முருக பக்தர்கள் சார்பாக நடைபெறும் மாநாட்டில், கட்சி வேறுபாடின்றி, காங்கிரஸ் தலைவரும், சட்டமன்றத்தில் எனதருகே அமர்ந்திருக்கும் என் அன்புக்குரிய நண்பருமான செல்வபெருந்தகை உட்பட, அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அன்புடன் அழைக்கிறேன்.

இவ்வாறு நயினார் நாகேந்திரன் அறிக்கையில் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us