ADDED : ஜன 07, 2026 07:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், 'தமிழர்களின் தீபமேற்றும் உரிமையை மீட்டெடுத்ததை கொண்டாடும் விதமாக, அனைத்து வீடுகளிலும் அகல் விளக்கேற்றி, கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்து, 'வெற்றிவேல் வீரவேல்' என்று மாக்கோலமிட வேண்டும்' என, நேற்று மதியம் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, பா.ஜ., நிர்வாகிகள், தொண்டர்கள், நேற்று மாலை தங்கள் வீடுகளில் விளக்கேற்றி, புகைப்படம் எடுத்து சமூக வலை தளங்களில் பதிவிட்டனர்.

