ADDED : ஏப் 18, 2025 09:34 PM

பா.ஜ., கூட்டணியால், தமிழக முதல்வருக்கு தோல்வி பயம் வந்து, மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. அதனால் தான், அமித் ஷாவை விமர்சிப்பதாக நினைத்து, வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி உள்ளார். அ.தி.மு.க.,வுடன் பா.ஜ., மீண்டும் கூட்டணி என்றதும், 'தமிழக உரிமை பறிக்கப்படும்' என்று பேசுகிறார். அப்படியென்றால், 1999ல் பா.ஜ.,வுடன் தி.மு.க., கூட்டணி வைத்தபோது, அப்படித்தான் நடந்ததா?
அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி சந்தர்ப்பவாதம் என்றால், தி.மு.க., - காங்., கூட்டணி இயற்கையானதா?
ஹிந்திக்கு எதிராக தமிழக மக்கள் இருப்பது போல, ஒரு மாய பிம்பத்தை கட்டமைக்கின்றனர். ஆனால் தமிழகத்தில், 55 லட்சம் பேர், தற்போதும் ஹிந்தி படித்துக் கொண்டுள்ளனர். தெலுங்கு மொழி படிக்கவும் பலர் ஆர்வமாக உள்ளனர். அந்த வாய்ப்பை கொடுக்கத்தான், புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது.
நயினார் நாகேந்திரன், தலைவர், தமிழக பா.ஜ.,

