ADDED : ஆக 20, 2025 05:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : தமிழக காங்கிரஸ் மனித உரிமை துறை நிர்வாகிகள் கூட்டம், சென்னையில், நேற்று அத்துறை மாநில தலைவர் மகாத்மா சீனிவாசன் தலைமையில் நடந்தது.
அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, சீனிவாசனை தவிர மற்ற அனைத்து நிர்வாகிகளும், அவர்கள் வகிக்கும் பொறுப்பிலிருந்து விடுவிக்கப் படுகின்றனர்.
இந்த அமைப்புக்கு, 'ஆன்லைன்' வாயிலாக, 3,500 பேர் மட்டுமே உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்; உறுப்பினர்கள் சேர்க்கை சரிவர நடக்கவில்லை. தமிழக காங்கிரஸ் கட்சியின் மனித உரிமை துறை கலைக்கப் படுகிறது.
இவ்வாறு தீர் மானத்தில் கூறப்பட்டு உள்ளது.