ADDED : பிப் 01, 2025 11:14 PM
சென்னை:''எந்தெந்த மாநிலங்களில் தேர்தல் வருகிறதோ, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறதோ, அம்மாநிலங்களுக்கு மத்திய அரசு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது,'' என, துணை முதல்வர் உதயநிதி கூறினார்.
அவர் அளித்த பேட்டி:
மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில், தமிழகத்திற்கு எவ்வித அறிவிப்பும் இல்லை. மத்திய அரசு, தமிழகத்திற்கு மிகப்பெரிய துரோகத்தை செய்து இருக்கிறது. மெட்ரோ ரயில் திட்டம், சாலைப்பணிகள் உட்பட, எந்த திட்டத்திற்கும் மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி ஒதுக்கவில்லை. இதற்கெல்லாம், தமிழக மக்கள் தக்க பதிலடி கொடுப்பர்.
எந்த மாநிலங்களில் தேர்தல் நடக்க இருக்கிறதோ, எந்த மாநிலங்களில் மத்திய அரசின் கூட்டணி ஆட்சிகள் நடக்கிறதோ, அம்மாநிலங்களுக்கு மட்டும், பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு சலுகை வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

