sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'பா.ஜ., கூட்டணிக்கு விஜய், சீமான் அவசியம்' டில்லிக்கு தகவல் அனுப்பும் தமிழக நிர்வாகிகள்

/

'பா.ஜ., கூட்டணிக்கு விஜய், சீமான் அவசியம்' டில்லிக்கு தகவல் அனுப்பும் தமிழக நிர்வாகிகள்

'பா.ஜ., கூட்டணிக்கு விஜய், சீமான் அவசியம்' டில்லிக்கு தகவல் அனுப்பும் தமிழக நிர்வாகிகள்

'பா.ஜ., கூட்டணிக்கு விஜய், சீமான் அவசியம்' டில்லிக்கு தகவல் அனுப்பும் தமிழக நிர்வாகிகள்


ADDED : ஜூன் 15, 2025 01:52 AM

Google News

ADDED : ஜூன் 15, 2025 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'தி.மு.க.,வுக்கு எதிராக, பா.ம.க., - தே.மு.தி.க.,வை உள்ளடக்கி, பலமான கூட்டணியை அ.தி.மு.க., அமைத்தாலும், த.வெ.க., அல்லது நாம் தமிழர் கட்சி இருந்தால் தான் ஓட்டுக்கள் சிதறுவதை தடுக்க முடியும்' என, பா.ஜ., மேலிட தலைவர்களுக்கு, தமிழக நிர்வாகிகள் தகவல் அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:

தமிழகத்தில், தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., - த.வெ.க., - நாம் தமிழர் ஆகிய கட்சிகள் இடையே ஐந்து முனை போட்டி ஏற்படும் சூழல் இருந்தது. இதனால் ஓட்டுக்கள் பிரிந்து, தி.மு.க.,வுக்கு சாதகமாக அமையும் என்பதால், தி.மு.க., கூட்டணிக்கு எதிராக பலமான அணி அமைக்கும் வேலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஈடுபட்டுள்ளார்.

கடந்த ஏப்ரலில் தமிழகம் வந்து, அ.தி.மு.க., கூட்டணியை அறிவித்தார். தொடர்ந்து, பா.ம.க., - தே.மு.தி.க., - த.வெ.க., - நாம் தமிழர் ஆகிய கட்சிகளையும் சேர்க்கும் முயற்சிகள் நடக்கின்றன. பெரிய கட்சியான அ.தி.மு.க.,வே தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த பின், பா.ம.க.,வும், தே.மு.தி.க.,வும் கூட்டணிக்கு வர தாமதம் செய்கின்றன. இந்த சூழலில், மதுரைக்கு சமீபத்தில் வந்திருந்த அமித் ஷா, 'த.வெ.க., தரப்புடன் பேச்சு நடத்தப்பட்டதில், நம் கூட்டணிக்கு வர வாய்ப்பு குறைவு. விஜய் வந்தாலும், பா.ஜ.,வுக்கு பெரிய அளவில் பலன் கொடுக்காது. த.வெ.க.,வுக்கு சிறுபான்மையினரின் ஓட்டுக்கள் தான் அதிகம் கிடைக்கும். அந்த ஓட்டுக்கள், பா.ஜ.,வுக்கு கிடைக்காது' என, கூறியுள்ளார்.

ஆனால், விஜய், சீமான் பா.ஜ., கூட்டணியில் அவசியம் இருக்க வேண்டும்.

ஏனெனில் விஜய், சீமான் கட்சிகள் வாங்க உள்ள ஓட்டுக்களில், தி.மு.க.,வின் எதிர்ப்பு ஓட்டுக்கள் மட்டும் இருக்க போவதில்லை; பா.ஜ., கூட்டணிக்கு வர வேண்டிய ஓட்டுக்களும் உள்ளன.

உதாரணமாக, ஒரு ஓட்டுச்சாவடியில் விஜய் கட்சி, 50 ஓட்டுக்கள் வாங்கினால், அதில், 10 ஓட்டுக்கள் தி.மு.க.,வின் ஓட்டுக்களாக இருக்கும். அதேபோல், 10 ஓட்டுக்கள் பா.ஜ., அணிக்கு வர வேண்டியதாக இருக்கலாம்.

பா.ஜ.,வின் திராவிட எதிர்ப்பு, ஆன்மிக ஆதரவு கருத்துக்களை, தற்போது சீமான் பேசி வருகிறார். எனவே, வரும் சட்டசபை தேர்தலில், ஒரு ஓட்டுச்சாவடியில் சீமான் 10 ஓட்டுக்கள் வாங்கினால், நிச்சயம் ஐந்து ஓட்டுக்கள் பா.ஜ., அணிக்கு வரக்கூடியதாக இருக்கும். இதேபோல் தமிழகம் முழுதும் இரு கட்சிகளும் பா.ஜ.,வுக்கு வரக்கூடிய ஓட்டுக்களை பிரித்தால் வெற்றியை நெருங்குவதில் சிக்கல் ஏற்படும்.

எனவே, இருவரில் ஒருவராவது இருந்தால் தான், அ.தி.மு.க., தலைமையில் பா.ம.க., - தே.மு.தி.க., என, பலமான கூட்டணியை அமைத்தாலும், பா.ஜ., அணிக்கு வரக்கூடிய ஓட்டுக்கள் சிதறுவதை தடுக்க முடியும்.

எனவே, இரு கட்சிகளையும் கூட்டணியில் சேர்க்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜய் வரவில்லை என்றால், சீமானையாவது சேர்க்க வேண்டும்.

இதுதொடர்பான விரிவான விபரங்களை, அமித் ஷா உள்ளிட்ட மேலிட தலைவர்களின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு, தமிழக பா.ஜ., நிர்வாகிகள் அனுப்பியுள்ளனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.






      Dinamalar
      Follow us