ADDED : செப் 02, 2025 02:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேருக்கு 14.50 கோடி ரூபாய் அபராதம் விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. ராமேஸ்வரம் அருகே, பாம்பனில் இருந்து சீனி என்பவரது விசைப்படகில், கடந்த ஆக., 5ல் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 10 பேரை, எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
இலங்கையில் உள்ள புத்தளம் சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் அனைவரும், நேற்று புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, ராமேஸ்வரம் மீனவர்களுக்கு, தலா 5 கோடி வீதம் 50 கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இந்த அபராதத் தொகையானது, இந்திய மதிப்பில் 14.50 கோடி ரூபாய்.

