ADDED : செப் 02, 2025 02:07 AM
சென்னை: ' முதல்வர் ஸ்டாலின் தன் வீண் விளம்பரங்களை நிறுத்திவிட்டு, கொலோன் பல்கலையில் மீண்டும் தமிழ் துறையை கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
ஜெர்மனி நாட்டுக்கு சுற்றுலா சென்றிருக்கும் முதல்வர் ஸ்டாலின், கொலோன் பல்கலை, தமிழ் துறை நுாலகத்தை பார்வையிட்டதாக தெரிவித்துள்ளார். இந்த பல்கலையின் தமிழ் துறை, கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே மூடப்பட்டதாக, இந்த ஆண்டு ஜனவரியில் செய்திகள் வெளியாகின. சூரியன் திரைப்படத்தில் கவுண்டமணி, 'போன் ஒயர் பிஞ்சு ஒரு வாரம் ஆச்சு' என்ற நகைச்சுவை காட்சி மிகவும் புகழ்பெற்றது.
முதல்வரின் நகைச்சுவை நாடகங்கள், அதற்கு சிறிதும் குறைந்ததல்ல. ஸ்டாலின் தன் வீண் விளம்பரங்களை நிறுத்திவிட்டு, கொலோன் பல்கலையில் மீண்டும் தமிழ் துறையை கொண்டு வர, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

