ADDED : ஜூன் 05, 2025 11:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழகத்தில் மளிகை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ள வணிகர்கள், ஆண்டுதோறும் மே 5ம் தேதியை வணிகர் தினமாக கொண்டாடி வருகின்றனர். அன்று வணிகர் சங்கங்கள் சார்பில், வணிகர்கள் பங்கேற்கும் மாநாடுகளும் நடத்தப்படுகின்றன.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் கடந்த மாதம் 5ம் தேதி, வணிகர் சங்கங்கள் நடத்திய வணிகர் தின மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசும் போது, 'வணிகர்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்ற, மே 5ம் தேதியை வணிகர் தினமாக அறிவித்து விரைவில் அரசாணை வெளியிடப்படும்' என்றார்.
அதன்படி, மே 5ம் தேதியை வணிகர் தினமாக அறிவித்து, அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.