sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

23 வகை நாய்களுக்கு தமிழக அரசு தடை: முழு விபரம் இதோ!

/

23 வகை நாய்களுக்கு தமிழக அரசு தடை: முழு விபரம் இதோ!

23 வகை நாய்களுக்கு தமிழக அரசு தடை: முழு விபரம் இதோ!

23 வகை நாய்களுக்கு தமிழக அரசு தடை: முழு விபரம் இதோ!

12


UPDATED : மே 09, 2024 04:51 PM

ADDED : மே 09, 2024 04:50 PM

Google News

UPDATED : மே 09, 2024 04:51 PM ADDED : மே 09, 2024 04:50 PM

12


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 23 வகையான வெளிநாட்டு கலப்பு மற்றும் கலப்பற்ற நாய் இனங்களை தடை செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு தரப்பில் வெளியான அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கால்நடை பராமரிப்பு துறையின் வல்லுநர்கள் மற்றும் துறை சார்ந்த பங்கேற்பாளர்களுடன் ஏற்படுத்தப்பட்ட குழுவின் பரிந்துரையில் சுமார் 23 வகையான வெளிநாட்டு கலப்பு மற்றும் கலப்பற்ற நாய் இனங்கள் மிகவும் ஆக்ரோஷமானவை எனவும் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் இனங்கள் எனவும் பட்டியலிடப்பட்டுள்ளது.

இந்த 23 வகை நாய் இனங்கள் மற்றும் அவைகளின் கலப்பினங்கள் இறக்குமதி செய்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும், வளர்ப்பு பிராணிகளாக விற்பனை செய்வதற்கும் மற்றும் இவைகளின் எல்லா வகை பயன்பாட்டிற்கும் தடை செய்யப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட நாய் இனங்கள்


1. பிட்புல் டெரியர்

2. தோசா இனு

3. அமெரிக்கன் ஸ்டப்போர்டு ஷயர் டெரியர்

4. பிலா ப்ரேசிலேரியா

5. டோகா அர்ஜென்டினா

6. அமெரிக்கன் புல் டாக்

7. போயர் போயல்

8. கன்சல்

9. சென்ட்ரல் ஆசியன் ஷெபர்டு டாக்

10. காக்கேஷியன் ஷெபர்டு டாக்

11. சவுத் ரஷ்யன் ஷெபர்டு டாக்

12. டோன் ஜாக்

13. சர்ப்ளேனினேக்

14. ஜாப்னிஸ் தோசா

15. அகிதா மேஸ்டிப்

16. ராட்வீலர்ஸ்

17. டெரியர்

18. ரோடீசியன் ரிட்ஜ்பேக்

19. உல்ப் டாக்

20. கேனரியோ அக்பாஸ் டாக்

21. மாஸ்கோ கார்ட் டாக்

22. கேன்கார்சோ

23. பேண்டாக்

கட்டுப்பாடுகள்


* தற்போது வளர்ப்பு பிராணியாக மேற்கண்ட வகை நாய்களை வைத்திருப்போர் அவற்றை உடனடியாக ஆண் / பெண் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து இனப்பெருக்கம் செய்யாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.

* நாய் வளர்ப்பவர் நாயை வெளியில் பொது இடங்களுக்கு கூட்டி செல்லும்போது கட்டாயமாக லீஷ் (இணைப்பு சங்கிலி) மற்றும் தற்காப்பு முகக்கவசம் அணிந்து அழைத்து செல்ல வேண்டும்.

* அந்த இணைப்பு சங்கிலி, நாயின் அகலத்திற்கு ஏற்றவாறு குறைந்தபட்சம் 3 மடங்கு நீளம் இருக்க வேண்டும்.

* நல்ல தரமான கழுத்துப்பட்டை / தோள்பட்டை அணிவித்து நாய் உரிமையாளர்கள் தங்கள் செல்லப் பிராணிகளை வெளியே அழைத்துச் செல்வது, செல்லப் பிராணிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பாக அமையும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us