sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

முருங்கை இலை ஏற்றுமதி தமிழக அரசு அழைப்பு

/

முருங்கை இலை ஏற்றுமதி தமிழக அரசு அழைப்பு

முருங்கை இலை ஏற்றுமதி தமிழக அரசு அழைப்பு

முருங்கை இலை ஏற்றுமதி தமிழக அரசு அழைப்பு

2


ADDED : ஏப் 06, 2025 12:54 AM

Google News

ADDED : ஏப் 06, 2025 12:54 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'முருங்கை இலை சாகுபடி வாயிலாக, நிலையான வருமானம் பெற விருப்பம் உள்ள உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், விவசாயிகள், தனியார் பதப்படுத்தும் நிறுவனங்கள் தொடர்பு கொள்ளலாம்' என, தமிழக அரசின் டி.என்.ஏபெக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் அழகுசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக அரசின் முருங்கை சிறப்பு ஏற்றுமதி சேவை மையத்திற்கு, பிற தனியார் நிறுவனங்களிடம் இருந்து, ஆண்டுக்கு, 200 டன் முருங்கை இலை பொடிக்கு தேவையான சந்தை வாய்ப்பு ஏற்படுத்த வேண்டுகோள் வந்துள்ளது. இந்த வாய்ப்பு, டி.என்.ஏபெக்ஸ், தனியார் நிறுவனம், விவசாயிகள் இணைந்த முத்தரப்பு ஒப்பந்தம் வாயிலாக செயல்படுத்தப்படும்.

முருங்கை இலை சாகுபடி வாயிலாக சந்தை வாய்ப்பு பெற்று, நிலையான வருமானம் பெற, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், விவசாயிகள், தனியார் பதப்படுத்தும் நிறுவனங்கள் ஆகியவை முன்வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முருங்கைசாகுபடி 20,741 எக்டேர்
உற்பத்தி 8.41 லட்சம் டன்
உலகளாவிய சந்தை வாய்ப்பு: ரூ. 86,000 கோடி
முருங்கை இலை பொடிக்கு மட்டும் : ரூ. 51,000 கோடி
80%உலகளவில் முருங்கைக்கான சந்தை தேவையை பூர்த்தி செய்வதில் இந்தியாவின் பங்கு
தமிழகம்
*இந்தியாவில் முதலிடம்
*மதுரையில் முருங்கை சிறப்பு ஏற்றுமதி மையம்
*35 ஏற்றுமதி நிறுவனங்கள் வாயிலாக 800 ஏக்கரில் தனித்தன்மையான முருங்கை இலை சாகுபடி
*ஆண்டுக்கு, 720 டன் முருங்கை இலை பொடி தயாரிப்பதற்கான உள்கட்டமைப்பு வசதிகள்
ஏற்றுமதியாகும் முருங்கை பொருட்கள்
முருங்கை இலை பொடி
எண்ணெய்
விதை பொருட்கள்
முருங்கை தேனீர் பொருட்கள்
https://www.tnapex.tn.gov.in/ords/r/wstnapex/tnapex173136/moringa-export-zone?session=4601688178950








      Dinamalar
      Follow us