'மல்டி ஆக்சில்' சொகுசு பஸ்கள் வாங்குகிறது தமிழக அரசு
'மல்டி ஆக்சில்' சொகுசு பஸ்கள் வாங்குகிறது தமிழக அரசு
ADDED : மே 03, 2025 02:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில், முதல் முறையாக, 'மல்டி ஆக்சில்' சொகுசு பஸ்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
இதுகுறித்து, அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், 1,080க்கும் மேற்பட்ட டீலக்ஸ், 'ஏசி' விரைவு பஸ்கள் இயக்கப்படுகின்றன. முதல் முறையாக, 'மல்டி ஆக்சில்' சொகுசு பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளோம்.
முதல் கட்டமாக, 20 பஸ்கள் வாங்க, 'டெண்டர்' வெளிடப்பட்டுள்ளது. ஒரு பஸ் விலை, 1.15 கோடி ரூபாய் இருக்கும். ஒரே நேரத்தில், 55 பேர் பயணம் செய்ய முடியும். சொகுசு இருக்கைகள், 'ஏசி' வசதி, மொபைல் போன், 'சார்ஜிங்' மற்றும், 'வைபை' உள்ளிட்ட வசதிகள் இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

