ரூ.51,000 கோடிக்கு கடன் பத்திரங்கள் வெளியிடுகிறது தமிழக அரசு
ரூ.51,000 கோடிக்கு கடன் பத்திரங்கள் வெளியிடுகிறது தமிழக அரசு
ADDED : ஜன 06, 2026 05:44 AM

சென்னை: தமிழக அரசு, நடப்பு ஜனவரி - மார்ச் காலாண்டில், கடன் பத்திரங்களை வெளியிட்டு 51,000 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி, ஒவ்வொரு காலாண்டின் துவக்கத்திலும் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளிடம் கலந்தாலோசித்து, வெளியிட உள்ள கடன் பத்திரங்கள் குறித்த உத்தேச அறிக்கையை வெளியிடும். மாநிலங்களின் கடன் தேவை மற்றும் மத்திய அரசின் ஒப்புதலை பொறுத்து இந்த மதிப்பீடு மாற்றத்துக்கு உட்பட்டதாகும்.
அந்த வகையில் நடப்பு நிதியாண்டின் கடைசி காலாண்டில், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கடன் பத்திரங்கள் வாயிலாக மொத்தம் 4,99,821 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் கடன் சுமை, தற்போது கிட்ட தட்ட 8.75 லட்சம் கோடி ரூபாயாக உள்ள நிலையில், மார்ச் மாத இறுதியில், அது 9.29 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று தெரிகிறது.

